உஸ்தாத் ராம் பொதினேனி நடித்துள்ள, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படம் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திலிருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர். இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் ஒருபடி மேலே போய், சஞ்சய் தத்தின் வில்லன் கதாபாத்திரத்திரமான பிக் புல்-க்கு பாடலையும் கொடுத்திருக்கிறார்.
’பிக் புல்’ பாடலில் மணி ஷர்மாவின் இசை வைப் & எனர்ஜிட்டிக்காக உள்ளது. இதன் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹை எனர்ஜியில் கொண்டாட்டமான சூழ்நிலையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஒன்றாக இதில் கொண்டு வருகிறது. காவ்யா தாப்பரும் இந்தப் பாடலுக்கு இன்னும் வண்ணம் சேர்த்துள்ளார். இவர்கள் அனைவரின் நடனமும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். பாஸ்கரபட்லா ரவி குமாரின் வரிகள் ’பிக் புல்’ பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. ப்ருத்வி சந்திரா மற்றும் சஞ்சனா கல்மான்ஜே ஆகியோர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள்.