‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் 32-வது படம் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு.’ இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. அதில் நானி கலந்து கொண்டார்.
இந்த படத்தில் நானி சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில், ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் பிரத்யேக காணொளி சமீபத்தில் வெளியானது.
யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது.