500 பேருக்கு உணவு… பிறந்தநாளில் ஆதரவற்றவர்களை மகிழ்வித்து மகிழ்ந்த இயக்குநர் இ. வி. கணேஷ்பாபு!

ரிலீஸாவதற்கு முன்பே சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைக் குவித்துக் கொண்டிக்கிற, தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற, விரைவில் ரிலீஸாகவிருக்கிற ‘கட்டில்‘ படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கிற இ.வி.கணேஷ்பாபுவின் பிறந்தநாள் இன்று!

அதையொட்டி, கட்டில் திரைப்படத்தை தயாரித்திருக்கிற, மேப்பில் லீப்ஃஸ் புரொடக்சென்ஸ் சார்பில், உதவும் கரங்கள் விடுதியில் தங்கியுள்ள 500 பேருக்கு மதிய உணவளித்து தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

இன்றைய நிகழ்வு பற்றி, இ.வி.கணேஷ்பாபுவிடம் கேட்டபோது, ”மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நமக்கு இருந்தாலே போதும். அதற்கான பணம் மற்றவர்கள் மூலமாக நமக்கு கிடைக்கும். அந்த வகையில் கிடைத்து இன்று உதவும் கரங்கள் விடுதியில் தங்கியுள்ள 500 பேருக்கு மதிய உணவளித்து எனது பிறந்தநாளை கொண்டாடினேன்.

தனது ஊர் எது, பெற்றோர் யார் என்று எதுவுமே அறியாமல்

தத்தெடுக்கப்பட்டு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தொடங்கி மேற்படிப்பு கற்கும் பிள்ளைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள் வரை பசியாறி வாழ்த்தினார்கள். இந்த இனிய நாளில் மனதுக்கு நிறைவாக உணர்ந்தேன்.

ஆதரவற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமே கிடையாது” என்ற நிலை உருவாக நாமும் முயற்சி செய்யவேண்டும். அப்படி ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது” என்றார்.

கட்டில் படம் விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here