இயக்குநர் இ.வி. கணேஷ்பாபுவின் புதிய சிந்தனை… யாருமே தொட முடியாத பிரமாண்டத்தில் ’காதி பட்டு’ விளம்பரம்!

நடிகர், கவிஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இ.வி.கணேஷ்பாபு, ‘கட்டில்’ என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வரும் ‘கட்டில்’ திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, ‘காதி கிராஃப்ட்’ நிறுவனத்தின் பட்டுப் புடவைகளுக்காக இயக்கியிருக்கும்
விளம்பரப் படம் பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்டிருப்பதோடு, அனைத்து முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளிலும் காண்போரை வியப்படையச் செய்துள்ளது.

எத்தனையோ பிரமாண்டமான விளம்பரப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும் காதி கிராஃப்ட் நிறுவனத்தின் பட்டுப் புடவை விளம்பரப்பாடல் புதிய சிந்தனையோடு உருவாகியிருப்பது தான்  தனிசிறப்பு.

காதி கிராஃப்ட் பட்டு புடவை தரத்தில் மட்டும் உயர்ந்தது அல்ல, அந்த புடவை நெய்யும் தொழிலாளர்களின் கைவண்ணத்தினாலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. மிக நலிவடைந்த நெசவாளர்களால் நெய்யப்படும் காதி கிராஃப்ட் பட்டு புடவைகளை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், அதை நெய்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பிரத்யேகமான அனைவரும் வாங்கும் விலைகளில் கிடைக்கும் காதி கிராஃப்ட் பட்டுப் புடவைகளின் மற்றொரு தனி சிறப்பு என்னவென்றால், 10 வருடங்களுக்குப் பிறகும், அந்த புடவைகளில் இருக்கும் வெள்ளி சரிகைகளின் மதிப்பு,
புடவை வாங்கிய விலைக்கு சமமாக இருப்பதோடு, சில நேரங்களில் புடவை வாங்கிய விலையை விட கூடுதலான தொகையும் கிடைக்கும் என்பது உறுதி.

இத்தகைய தரம் வாய்ந்த காதி கிராஃப்ட் பட்டுப் புடவைகளை, வழக்கமான விளம்பரப் படங்களைப் போன்று அல்லாமல், புதிய சிந்தனையோடு படமாக்கியிருக்கும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபுவின் புதிய முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆம், சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ் பாபு
படமாக்கியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு திரைப்படம் மற்றும் விளம்பரப் படங்களின் படப்பிடிப்பும் நடந்திராத இக்கோவிலில்
காதி கிராஃப்ட் பட்டு புடவையின் விளம்பர படத்தை இயக்குநர் கணேஷ்பாபு படமாக்கியிருக்கும் விதத்தையும், அக்கோவிலின் பிரமாண்டத்தையும் 40 வினாடிகளே ஓடும் இந்த விளம்பரப் படத்தைக்கண்டு பலர் வியப்படைந்ததோடு, அவரை தொடர்பு கொண்டு பாராட்டியும் வருகிறார்கள்.

எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து, எப்படிப்பட்ட விளம்பர படத்தை எடுத்தாலும், கணேஷ்பாபு இயக்கியிருக்கும் இந்த விளம்பர படத்தின் பிரமாண்டத்தை நெருங்க முடியாது. காரணம், இந்த விளம்பரப் படம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் படமாக்கப்பட்டிருப்பதால் பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.

இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு, மகதி

விளம்பர படத்தை காட்சிப்படுத்தியதில் மட்டும் அல்ல, அதில் இடம் பெறும் பாடலை பதிவு செய்வதில் கூட, பாரம்பரியத்தை கடைப்பிடித்திருக்கிறார் இயக்குநர். பாடலைப் பாடிய மகதியை பட்டுப் புடவை அணிந்து பாட
வைத்து மேக்கிங் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னணிப் பாடகியாக சுமார் 20 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கும் பாடகி மகதி, எத்தனையோ திரைப்படங்கள்
மற்றும் விளம்பரப் படங்களுக்காக பாடியிருந்தாலும், பாடல் பதிவின் போது இதுவரை சுடிதார் மற்றும் நவநாகரிக உடைகளை மட்டும் அணிந்து பாடியிருக்கிறார். காதிகிராஃப்ட் பட்டு புடவை விளம்பரப் படத்தின் பாடல்
பதிவுக்காக முதல்முதலாக புடவையணிந்து பங்கேற்றதும் அதுவும் பட்டு புடவை உடுத்தியிருப்பதும் பேசு பொருளாகியிருக்கிறது.

இ.வி. கணேஷ்பாபு, ஸ்ரீகாந்த் தேவா, பாடகி மகதி

இந்த விளம்பரப் படத்தை இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு, அதில் இடம்பெற்றுள்ள பாடலையும் எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த்
தேவா இசையமைக்க, சுமார் 120-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா காலங்களில் பல விழிப்புணர்வுப் பாடல்களை எழுதி இயக்கி வெளியிட்ட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, தமிழக அரசுக்காக பல விழிப்புணர்வுப் படங்களை இயக்கி, பலரது பாராட்டைப் பெற்று ஒட்டு மொத்த விளம்பர உலகின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here