‘ஓ மணப்பெண்ணே’ சினிமா விமர்சனம்

ஓ மணப்பெண்ணே

தெலுங்குல 2016ல் ரிலீசான படம் தான் விஜய் தேவரகொண்டா நடிச்ச ‘பெல்லி சூப்புலு’. 1 கோடி இன்வெஸ்ட் பண்ணி 30 கோடி வரைக்கும் வசூலைக் கொட்டிய படம். அதனாலேயே 2019ல ‘விஜய் சூப்பரும் பெளர்ணமியும்’ங்கிற பேர்ல மலையாளத்துல ரீமேக் ஆச்சு. அங்கேயும் 30 கோடி வரைக்கும் வசூலைப் பார்த்தது. இப்போ தமிழ்ல ‘ஓ மணபெண்ணே’ங்கிற பேர்ல விஜய் தேவரகொண்டா கேரக்டர்ல ஹரிஸ் கல்யாணையும் ரீது வர்மா கேரக்டர்ல பிரியா பவானி சங்கரையும் மேட்ச் பண்ணியிருக்காங்க.

சமீபகாலமா கோலிவுட் சத்தியவான்கள் வட கொரியா, தென் கொரியான்னு ஆல் ஏரியாவிலும் ரவுண்டு கட்டி ‘சுடுற’ வேலையை சீரியஸா செய்ய, அதை மோப்பம் பிடிச்ச ‘கொரிய’ குரூப் ஒண்ணு மும்பையில ஆபீஸ் போட்டு புதுசா எந்த தமிழ்ப்படம் வந்தாலும் அது எந்த கொரியன் படத்துல இருந்து சுடப்பட்டதுன்னு செக் பண்ணி பைன் போடுற பகீர் சம்பவமெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. அது ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் படத்தை பார்த்து முடிச்சிட்டு வெளியில வர்றப்போ நமக்கு ‘பெல்லி சூப்’ படத்தோடவெல்லாம் கம்பேர் பண்ணத் தோணல. ஏன்னா இதையெல்லாம் நாம ஆண்பாவம், இன்னும் ஒன்றிரெண்டு பழைய தமிழ்ப்படங்கள்லேயே பார்த்தாச்சு. அந்த வகையில இந்தப்படம் நாலைஞ்சு தமிழ்ப்படங்களை மொத்தமா பிச்சிப்போட்டு கொத்து பரோட்டோ போட்டா மாதிரி இருந்துச்சு.

ஓ மணப்பெண்ணே

பொண்ணு வீட்ல இருந்து வர்ற வரதட்சணை பணத்தை வெச்சு வாழ்க்கையில செட்டிலாயிடாம்னு நெனைக்கிற ஹீரோ. பாரீனுக்குப் போய் படிச்சு, பெரிய கம்பெனியில வேலைக்கு சேர்ந்து செட்டிலாகணும்னு நெனைக்கிற ஹீரோயின். இன்னும் எளிமையா சொல்லணும்னா மூணு வேளையும் ஊராங்காசுல மூக்குமுட்ட சாப்பிடணும்னு நெனைக்கிற ஹரீஸ் கல்யாண். ஒரு டீ குடிச்சாலும் சொந்த சம்பாத்தியல தான் குடிக்கணும்னு நெனைக்கிற ப்ரியா பவானி சங்கர். ரெண்டு பேரும் அவங்க நிச்சயதார்த்தத்துல மீட் பண்ணிக்கிறாங்க. அங்க ஹரீஸ் கல்யாண் தன்னோட ப்ளாஷ்பேக்கை பிரியாக்கிட்ட விவரிச்சுச் சொல்ல, பதிலுக்கு பிரியாவும் தன்னோட ப்ளாஷ்பேக்கை ஹரீஸ்கிட்ட விவரிச்சு சொல்றாங்க. நீ பாட… நான் ஆட…ங்கிற ரைமிங்க்ல அடுத்தடுத்த காட்சிகள் நகருது.

இண்டர்வெல்லுக்கு முன்னாடி சீன்லதான் தெரியுது ஹரீஸ் கல்யாண் பிரியா பவானி சங்கரை அட்ரஸ் மாறி பொண்ணு பார்க்க வந்த விஷயம். அதாவது ரொம்ப டெலிகேட் பொசிஷன் மோமன்ட். அதுக்கப்புறம் ரெண்டு பேரோட வாழ்க்கையிலும் ஒரு ஸ்ட்ரீட் புட் ட்ரக் எண்ட்ரி கொடுக்க என்னென்ன நடக்குங்கிறது? தான் படத்தோட கதை.

ஓ மணப்பெண்ணே

ஹரீஸ் கல்யாண் இன்னும் எத்தனை படங்கள்ல தான் எண்ட்ரி ஹீரோ மாதிரி லவ், லவ்வர்பாய் கேரக்டர்கள்லயே நடிச்சிக்கிட்டு இருப்பாருன்னு தெரியல. இன்னும் பல ஜானர்கள ட்ரை பண்ணுங்க தம்பி. இல்லேன்னா ஆடியன்ஸ் நீட்டிடுவாங்க கம்பி. அப்புறம் நீங்க தான் அழணும் தேம்பி. தேடி வருதேன்னு நடிக்காம கொஞ்சமாச்சும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரான்னு பார்த்து கமிட் பண்றாங்க பிரியா பவானி சங்கர். அதுக்காகவே அவங்களுக்கு ஒரு பொக்கே!

பிக்பாஸ் வீட்டுக்குள்ள திடீர் செலிபிரிட்டி வந்துட்டுப்போற மாதிரி படத்துல ‘குக் வித் கோமாளி’ அஸ்வினும் எக்ஸ் லவ்வரா வந்துட்டு… போயிடுறாரு.
ஹரீஸ் கல்யாணோட அப்பாவா வேணு அரவிந்த்! இது யாரு குடுத்த ஐடியான்னு தெரியல. இவர் வர்ற சீன்கள் எல்லாம் 80கள்ல வந்த டிவி சீரியலை விளம்பரம் இல்லாத டிஜிட்டல் வெர்ஷனா பார்த்த மாதிரி ஒரு பீலீங்க்ஸ்…

இப்படி சிலபல குறைகள் இருந்தாலும் படம் முழுக்க அங்கங்க நம்மளை சிரிக்க வைக்கிற சின்னச் சின்னடயலாக்குகள் தான் ஆகப்பெரும் ஆறுதல். அந்த மேஜிக்கை செஞ்ச புண்ணியவான் தி கிரேட் தீபக் சுந்தர்ராஜன். இந்தப் பேரை எங்கேயோ கேட்ட குரலா இருக்குல்ல?

ஓ மணப்பெண்ணே

கரெக்ட் விஜய் சேதுபதி, டாப்ஸியை வெச்சு ‘அனபல் சேதுபதி’ங்கிற ஒரு ‘அறு’ங்காவியத்தை கொடுத்த சாட்சாத் அதே தீபக் சுந்தர்ராஜன் தான். ஏம்ப்பா இவ்ளோ டேலண்ட்ட வெச்சுக்கிட்டா அப்படி ஒரு மொக்கைப் படத்தை கொடுத்த? சரி விடுங்க விஜய் சேதுபதி கால்ஷீட் வேஸ்ட்டா போயிடக் கூடாதுங்கிறதுக்காக புரொடக்‌ஷன் சைடுல இருந்து அவசரக்கோலத்துல அள்ளிப்போட்ட எட்டுப்புள்ளிக்கோலம் அது.

விஷால் கே சந்திரசேகரின் பாடல்கள் எல்லாம் யூத்துக்கு புடிக்கிற மாதிரி இருக்கு.

அதெல்லாம் சரி படத்தோட மேக்கிங்கில கொஞ்சம் தூக்கலாவே எலைட்த்தனம் தெரியுதே யாருப்பா இந்தப்படத்தோட டைரக்டர்? ஒருவேளை ‘மோகன்ராஜா’வோட மூணாவது சிஷ்யப்புள்ளையா இருப்பாரோன்னு விசாரிச்சா பேரு கார்த்திக் சுந்தர். இது அவருக்கு முதல் படமாம்! டைரக்டர் ஏ.எல் விஜய்யோட சிஷ்யர். ‘தலைவா’, ‘தலைவி’ன்னு தலையில அரைக்கிலோ அமிர்தாஞ்சனை தேய்க்க வைக்கிற உங்க குருநாதருக்கு நீங்க எவ்வளவோ பரவால்ல பாஸ். வெல்கம்… வாழ்த்துகள்…

ஒரிஜினல் படத்தைப் பார்த்து சீன் பை சீன் அப்படியே சுடாம அங்கங்க கொஞ்சம் சேஞ்ச் பண்ணியிருப்பது சுவாரஷ்யத்தை தந்தாலும் காட்சிகள் அங்கங்க பிரேக் டவுணாகி நின்ன டவுண்பஸ்சை தள்ளிவிடுறா மாதிரி மெதுவா நகர்வது தான் நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்குது. அதை மட்டும் பட்டி டிங்கரிங் பார்த்து கொஞ்சம் ஷேப் பண்ணியிருந்தா ‘ஓ மணப்பெண்ணை’ எல்லாரும் ‘எங்க வீட்டுப்பொண்ணு’ன்னு கொண்டாடியிருப்பாங்க.

இந்தப்படத்துல முதல்ல விஷ்ணு விஷாலும் தமன்னாவும் நடிக்க, கெளதம் மேனனின் சிஷ்யர் ஒருத்தர் தான் டைரக்ட் பண்ற மாதிரி பேச்சுவார்த்தை நடந்துச்சாம். (படத்துல ஓவர் எலைட் வாசனை அடிக்கும்போதே ஒரு டவுட்டு வந்துச்சு.) இடையில யாரு உள்ள பூந்து ‘ருத்ர தாண்டவம்’ ஆடுனாங்கன்னு தெரியல. மொத்த டீமும் மாறிடுச்சு!

-கிராமத்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here