மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலி காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றது. இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதுதொடர்பாக இயக்குநர் விஜய், ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.