ஐந்து வயது குழந்தை லக்ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடிக்க, அப்பா மீடியா தயாரிக்க, கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு உருவான ‘எங்க அப்பா’ மியூசிக் ஆல்பம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
பாடலை விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார்.
தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹைலைட்.
பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு ‘எங்க அப்பா’ ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியை ‘வருங்கால கதாநாயகி’ என பாராட்டி, வாழ்த்தினார்கள்!
உருவாக்கம்:-
எழுத்து, இயக்கம்: டாக்டர் எஸ்.வி.ரிஷி
தயாரிப்பு: அனீஷா சதீஷ்.
ஒளிப்பதிவு: ரெஜி மற்றும் கணேஷ்
இசை: சந்தோஷ் சாய்
எடிட்டிங்: பிரகாஷ் மப்பு
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்