Home பொது எங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

எங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

ஒரு பயங்கரவாதி, கணவனுடனும் அவன் குடும்பத்துடனும் இனிமையாக வாழ்ந்து வருகிற ஸ்வர்னாவை தன்னுடன் வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறான். அவள் சம்மதிக்க மறுக்கிறாள். கோபத்தின் உச்சிக்கு செல்லும் அவன் ஸ்வர்னாவின் குடும்பத்தை அழிக்க ஆட்களை இறக்குகிறான். கணவனின் குடும்பத்தைக் காப்பாற்ற களமிறங்குகிறார் ஸ்வர்னா.

ஸ்வர்னாவுக்கும் பயங்கரவாதிக்கும் என்ன தொடர்பு, அவனிடமிருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது மீதிக்கதை… தெலுங்கு ‘மா இன்ட்டி பங்காரம்’ தமிழில் எங்கள் தங்கமாகியிருக்கிறது. இயக்கம் ராஜ் நிடிமொரு

ஸ்வர்னாவாக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) சமந்தா. ஒழுங்காக சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாத அவர் கணவனின் குடும்பத்தினரைக் கவர்வதற்காக, தோழியை உதவிக்கு வைத்துக் கொண்டு ஸ்டார் ஹோட்டல் செஃப் ரேஞ்சுக்கு அலட்டல் காட்டுவதெல்லாம் கலகலப்புக்கு 100 % கேரண்டி. பயங்கரவாதிகளுடன் மோதும்போது ஆக்சன் ஹீரோவாக மாறி ஆச்சரியப்படுத்துகிறார்; சுழன்றடிப்பதில் அனல் பறக்கிறது.

அப்பாவிகளை போராளிகளாக்குவதாக சொல்லி பயங்கரவாதிகளாக மாற்றும் கொடூர நபராக குல்சன் தேவய்யாவின் வில்லத்தனம் ஸ்டைலிஷாக போதுமான மிரட்டலுடன் இருக்கிறது.

சமந்தாவின் சிநேகிதியாக வந்து, அவர் அடிக்கிற கூத்துக்கெல்லாம் எனர்ஜியேற்றுபவராக மன்ஜூஷா, கணவராக திகந்த் மஞ்சாலே, மாமியாராக கெளதமி மற்ற கேரக்டர்களில் ஸ்ரீ லக்‌ஷ்மி, ஸ்ரீமுகி, சைதன்ய கிருஷ்ணா என நடிகர் நடிகைகள் ஏராளம். நடிப்பு கச்சிதம்.

விளையாட்டுத்தனமாக நகரும் முன்பாதி, விறுவிறுப்பாக வேகமெடுக்கும் மறுபாதி என கட்டமைக்கப்பட்ட காட்சிகளை பரபரப்பின் சதவிகிதம் குறையாமல் கடத்தியிருக்கிறது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஆக்சன் கோரியோகிராபர் மார்வெல் நட்ராஜ், எடிட்டர் தர்மேந்திர காக்கராலா கூட்டணி.

ன முகத்தையும், மாஸான நடிப்பையும் சரியான அளவில் பார்வையாளர்களிடம் கடத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் சையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஒரு பெண் விவரம் தெரியாமல் பயங்கரவாத கும்பலில் சிக்கி, மீண்டு வந்து, மீண்டும் சிக்கி என மாறிமாறி பயணிக்கும் கதையை காமெடி கலகலப்போடு பார்க்கும் வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்வோருக்கு திருப்தி நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்