மேஜிக் நிபுணரும் சமூக சேவகருமான கோபிநாத் முதுகாட் ஒருங்கிணைக்கும் ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவில் நடிகர் ஜெயராம் பங்கேற்று வாழ்த்து!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் சென்டர் ‘Social Inclusion of Persons with Disabilities’ என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் பங்கேற்க, கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் நடிகர் ஜெயராம் விழிப்புணர்வுப் பயண பிரச்சாரம் என்ற அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த குழுவையும் வாழ்த்தினார். இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வில் கோபிநாத் முதுகாட்டின் மேஜிக் நிகழ்ச்சியும், அவரது குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

மேற்குறிப்பிட்ட பிரச்சாரம் அக்டோபர் 6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர் 3, 2024 அன்று புதுடெல்லியில் நிறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here