தலையில் வழியும் ரத்தம்; முகம் முழுக்க சூழ்ந்த சுருட்டுப் புகை… அனுஷ்காவின் பிறந்தநாளில் வெளியான ‘Ghaati’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

நடிகை அனுஷ்கா ஷெட்டி வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடியுடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘Ghaati.’

அனுஷ்காவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் இன்று படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பிண்டி மற்றும் பங்கா திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, படத்தில் அவரது பாத்திரம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.

போஸ்டரின் ஒவ்வொரு அம்சமும், ரத்தம் தெறிப்பதில் இருந்து கதாப்பாத்திரத்தின் அதிரடி தோற்றம் வரை, இந்தப்படம் மிக அழுத்தமான, யதார்த்தத்தை தத்ரூபமாக காட்டும் படமாக இருக்குமென்பதை  சொல்கிறது. படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டுகிறது.

விக்டிம், கிரிமினல், லெஜண்ட் என்ற டேக்லைன் இந்த படம் வழக்கமான கதையைத் தாண்டியதாக  இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இது மனிதநேயம், உயிர்வாழ்வு மற்றும் மீட்பு பற்றிய ஆய்வாக உள்ளது. க்ரிஷின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். இது சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட  வரலாற்று நாயகியின் கதை.

அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரங்களுடன்  பெரிய பட்ஜெட்டில்,  பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

படக் குழு:
எழுத்து & இயக்கம் : கிரிஷ் ஜகர்லமுடி
தயாரிப்பாளர்கள்: ராஜீவ் ரெட்டி, சாய்பாபு
ஜாகர்லமுடி
வழங்குபவர் : யுவி கிரியேஷன்ஸ்
பேனர்: ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்டின்
ஒளிப்பதிவு இயக்குனர்: மனோஜ் ரெட்டி கடாசானி
கலை இயக்குனர்: தோட்டா தரணி
இசையமைப்பாளர்: நாகவெல்லி வித்யா சாகர் வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
கதை: சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ்
எடிட்டர்: சாணக்யா ரெட்டி தூறுப்பு
ஸ்டண்ட் : ராம் கிருஷ்ணன்
பப்ளிசிட்டி டிசைனர் : அனில்-பானு
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : S2 Media சதீஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here