Home சினிமா ‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்கவிருக்கும் படம் பற்றிய அறிவிப்பால் பரபரப்பு; ஆச்சரியமூட்டும் அடுத்தகட்ட...

‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்கவிருக்கும் படம் பற்றிய அறிவிப்பால் பரபரப்பு; ஆச்சரியமூட்டும் அடுத்தகட்ட தகவல்கள் பிப்ரவரி 18-ல்!

‘இந்தியாவின் எடிசன்’ என்ற பெருமிதமான அடையாளத்துக்கு சொந்தக்காரரான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பான ‘ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆஃப் இந்தியா’ படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்க இருக்கிறார்.

நம் நாடு இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஆகச்சிறந்த வழியாகவும் இந்த பயோபிக் படங்கள் இருக்கின்றன.

அந்த வரிசையில் இணைகிறது கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கும் இந்த படம்.

கடந்த 2022ல் வெளியான தேசிய விருது பெற்ற ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தினை தொடர்ந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ப்ரீமியரின் போது அங்கு படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். இதுமட்டுமல்லாது, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த வெற்றிதான் ‘ராக்கெட்ரி’ படக்கூட்டணி மீண்டும் இணைய காரணமாக அமைந்தது.

ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்காமல் நடிகர் மாதவன் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ மற்றும் அவரது சமீபத்திய ரிலீஸான ‘சைத்தான்’ படத்தின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்போது, மாதவன் மற்றொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ‘இந்தியாவின் எடிசன்’ மற்றும் ‘கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கும் விதமாக ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

படத்தின் டைட்டில் லுக் வரும் பிப்ரவரி 18-ம் தேதி வெளியிடப்படும். படத்தின் மற்ற விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரியவரும்.

படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்