ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற பெற்ற படம் செல்ஃபி. இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனனுடைய கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டன.
அதையடுத்து, ஜிவி பிரகாஷ் & கௌதம் மேனன் இருவரும் ‘13’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தை ‘96’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
மர்மமான விசாரணை திகில் ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கே. விவேக் இயக்குகிறார். ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும்,பி.எஸ். ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.