Home பொது ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியில் பிஸியான நடிகர் ஏகன்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியில் பிஸியான நடிகர் ஏகன்!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, “‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான உழைப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தொடரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ’ஹைக்கூ’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் வெளியிடுவதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்” என்றார்.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே, ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது. இதன் மூலம் இப்படத்தின் கதை மற்றும் உணர்வுப்பூர்வமான களம் மீது அந்நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகியுள்ளது.
தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்