கொண்டாட்டத்துக்கு தயாராய் மலேசியா… இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை சிறப்பிக்க ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ நிகழ்ச்சியை நடத்தும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ்!

யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த ஜூலை மாதம் மலேசியாவில் யுவன் ரசிகர்கள் 20’000 பேர் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், ‘யுவன்25’ இசை நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்து நடத்தியது.
நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, நேஹா பாசின், விஜய் யேசுதாஸ், ஜாவேத் அலி, ஸ்வேதா பண்டிட், டீஜே, சாம் விஷால், பிரியங்கா, விஷ்ணுப்ரியா ரவி மற்றும் தொகுப்பாளர் டிடி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அந்த பிளாக்பஸ்டர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், வரும் ஜனவரி 21-ம் தேதி சனிக்கிழமை, மாலை 7 மணியளவில் மலேசியாவில் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ (Hearts Of Harris) என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
‘மஹா’ திரைப்படத்தை தயாரித்ததோடு, ‘கபாலி’, ‘VIP 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம் தான் மாலிக் ஸ்ட்ரீம்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here