கொடைக்கானல் செல்கிற காதலர்களை எச்சரிக்கும் ‘இன்னும் ஒரு காதல் பயணம்.’ 

நாயகனாக நவீன், நாயகியாக மலையாளப் படவுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான மெரின் பிலிப் நடித்துள்ள படம் ‘இன்னும் ஒரு காதல் பயணம்.’

இந்த படம்மூலம் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஆர்.டி. குஷால் குமார்.

படம் பற்றி அவரிடம் கேட்டோம்…

”மனம் கவர்ந்த காதலர்கள் தனிமையில் சந்தித்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்வது சகஜம். அப்படி ஒருநாள் நாயகனும் , நாயகியும் சந்திக்கிறபோது ஒரு வீபரீதம் நடக்கிறது. அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.மனம் ஒன்றுபட்ட காதலர்கள் தனிமையில் இனிமை காண செல்லும்போது அதுவும் கொடைக்கானலுக்கு செல்கிற காதலர்களுக்கு வரும் ஆபத்துகளை வரிசைபடுத்தி திரில்லாகவும், திகிலாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் படம் இது” என்றார்.கொடைக்கானலின் இயற்கை எழில்கொஞ்சும் அழகான பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த படத்தில் வில்லனாக பாடலீஸ்வரன் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் காளையப்பன் பங்கேற்க, சார்லி, ஜி.பி.முத்து, ஜார்ஜ், சுவாமிநாதன், கும்கி அஸ்வின், மதன்பாப், ஜெய்ஆனந்த், கீர்த்தனா, தீபா, மகேந்திரன், காதல் அருண், தியா, மூர்த்தி என பலரும் நடிக்கின்றனர்.

‘மதுரை மணிக்குறவர்’ படத்தை தயாரித்த ‘காளையப்பா பிக்சர்ஸ்’ ஜி.காளையப்பன் இந்தப் படத்தை தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

படக்குழு:-

இசை: வாரன் சார்லி

பாடல்கள்: ஞான கரவேல்

ஒளிப்பதிவு: எஸ்.ஐ. சந்தோஷ்குமார்

படத்தொகுப்பு: கணேஷ்பாபு

நடனப் பயிற்சி: ராதிகா, விமல் , லோகு

சண்டைப் பயிற்சி: பாப்புலர் பாபு

கலை: கே.எம்.நந்தகுமார்

தயாரிப்பு நிர்வாகம்: மகேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here