‘இரட்டா’ படத்தில் இரட்டை வேடத்தில் ஜோஜு ஜார்ஜ்! தெறிக்கவிடும் டிரெய்லர் வெளியீடு!

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை சகோதரர்களாக வினோத் பிரமோத் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ் கரியரில் இந்த படம் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதையும், இந்த படத்தின் கதாபாத்திரம் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கும் அவருக்கு இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதையும் டிரெய்லர் உறுதிபடுத்துகிறது.

இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலியோடு ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன்

பாடல் வரிகள் – அன்வர் அலி, முஹாசின் பராரி

இசை – ஜேக்ஸ் பிஜாய் ( மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்)

எடிட்டிங் – மனு ஆண்டனி

கலை – திலீப் நாத்

ஆடை வடிவமைப்பு – சமீரா சனீஷ்

ஒப்பனை – ரோனெக்ஸ்

சண்டைக் காட்சிகள் – கே.ராஜசேகர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here