பா விஜய் இயக்கும் அகத்தியா படத்தின் இரண்டாவது பாடலுடன் நாயகன் ஜீவாவுடன் விளையாட கேப் ஆப் வெளியீடு!

பாடலாசிரியர் பா விஜய் இயக்கியுள்ள அகத்தியா தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கவிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திலிருந்து அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது பாடல் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

படம் பற்றியும் பாடல் பற்றியும் பேசிய இயக்குநர் பா.விஜய், “இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது, இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனத்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்.

படத்தின் நாயகன் நடிகர் ஜீவா, “என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் “அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும், இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கும் கருத்தை, எனது நல்ல நண்பரும் கூட்டாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் எனக்கு முதலில் முன்மொழிந்தபோது, முதலில் நான் ஆச்சரியப்பட்டேன், அந்த ஐடியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு நாள் தேவைப்பட்டது. இருப்பினும், அதன் புதுமை மற்றும் படத்தைப் பிரபலப்படுத்த அற்புதமான வழி அது தான் என்பதை விரைவாக உணர்ந்தேன், உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன். பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட “என் இனிய பொன் நிலாவே” என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய பழம்பெரும் ஆளுமை இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ், “இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய தனித்துவமான பார்வையையும் வழங்கும்” என்றார்.

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025-ல் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் எனும் எதிரபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here