கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழச்சிகள் வரவிருக்கின்றன.
அந்த வரிசையில் வருகிற ஆகஸ்ட் 31 காலை 9 மணிக்கு ‘விக்ரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்குபெறும் சிறப்பு நேர்காணலும், காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றமும், காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் ‘டான்’ படக்குழுவினர் பங்குபெறும் ‘கோலிவுட் டான்’ சிறப்பு நிகழ்ச்சியும், பிற்பகல் 1.30 மணிக்கு விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா நடிப்பில் ‘மகான்’ புத்தம் புதிய திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் ‘இடியட்’ திகில் கலந்த காமெடி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.