‘கிடா’ படத்துக்கு மீண்டுமொரு சர்வதேச அங்கீகாரம்! மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வு.

மதுரை அருகேயுள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும், ஒரு ஆட்டுக்கும் இடையிலான உறவுப் பிணைப்பை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிடா.’

‘பூ’ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கியுள்ள இந்த படத்தில் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எளிமையான மனிதர்களின் வாழ்வியலை அதனதன் தன்மையோடு காட்சிப் படுத்தியிருக்கும் இந்த கலைப்படைப்பு, இன்னும் திரையரங்குகளுக்கு வராத நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்து, அங்கீகாரத்தைக் குவித்து வருகிறது.

சமீபத்தில், ‘இந்தியன் பனோரமா’ மற்றும் ‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’வில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை நடக்கும் 14-ம் இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பாராட்டுக்களை, விருதுகளை குவித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழு:
ஒளிப்பதிவு: எம்.ஜெயப்பிரகாஷ்
இசை: தீசன்
பாடல்கள்:  ஏகாதசி
ஆடியோகிராஃபி: தபஸ் நாயக்
கலை இயக்கம்: கே.பி. நந்து
எடிட்டர்: ஆனந்த் ஜெரால்டின்
தயாரிப்பு: ‘ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்’ ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here