இந்தியாவில் இதுவரை எந்த படமும் எட்டாத சாதனையை நிகழ்த்திய ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ!

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக முறியடித்திருக்கிறது.

அனைத்து தளங்களிலும் 112 மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோவாக அபிரிமிதமான சாதனைகளைப் படைத்து, தற்போதுள்ள வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாக ஜவானின் பிரிவியூ முதலிடத்தில் உள்ளது. இது ஷாருக்கானின் பரவலான புகழ்… படத்தை படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் படத்தின் வெளியிட்டை பற்றி அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் சான்றாகும்.

ஜவானுக்கு கிடைத்த சாதனை பார்வைகள் பெருகிவரும் நிலையில், போட்டிகள் நிறைந்த பொழுதுபோக்கு துறையில் கதை சொல்லல் மற்றும் பலனுள்ள சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் ஆற்றலை குறிக்கிறது.‌

இந்த வீடியோ அனைத்து எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்திய டிஜிட்டல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு திரையரங்குகளில் ஜவான் வெளியாவதற்கு முன்பே படம் குவித்துள்ள மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பிரதிபலிக்கிறது.

ஜவான் என்பது ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here