செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாதஸ்வரம்’ நெடுந்தொடர்!

சின்னத்திரையில் பெரியளவில் வரவேற்பு பெற்ற தொடர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வரவிருக்கிறது. அந்த வரிசையில் ‘நாதஸ்வரம்’ தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.

அது பற்றிய கூடுதல் விவரங்கள்…

‘தெய்வமகள்’, ‘நாயகி’, ‘திருமதி செல்வம்’ நெடுந்தொடர்களை தொடர்ந்து, குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘நாதஸ்வரம்’ மற்றும் ‘குலதெய்வம்’ நெடுந்தொடர்களை ஒளிபரப்ப கலைஞர் தொலைக்காட்சி முடிவு செய்திருக்கிறது.

இதில், ‘நாதஸ்வரம்’ நெடுந்தொடரை திருமுருகன் இயக்கி நடிக்க, உடன் மௌலி, பூவிலங்கு மோகன், ஷ்ரித்திகா, கீதாஞ்சலி, ரேவதி, சுருதி, ஜெயஸ்ரீ, சங்கவி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த தொடர், அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும்  அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here