ஆர்யா நடிப்பில், முத்தையா இயக்கத்தில், கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’
இந்த படம் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்றது. பின்னர் ZEE5 தளத்தில் வெளியாகி குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது!
முன்னதாக திரையரங்குகளில் வெளியான பின்பும், ‘அகிலன்’, ‘காஃபி வித் காதல்’ மற்றும் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களுக்கும், அதிகமான பார்வை எண்ணிக்கைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொண்ட இவ்வகை திரைப்படங்கள், குறிப்பாக குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரியளவில் மதிப்பைப் பெற்று வருகின்றன.
திரையரங்கில் வெளியான பின்பும் கூட, இந்தப்படங்களை ஓடிடியில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடி தளத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
அதை மனதில் கொண்டு தமிழில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 தொடர்ந்து பல நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறது. தமிழில் வெற்றிகரமான படைப்புகளுடன் முன்னணியில் இருந்து வருகிறது.
தொடர்ந்து புத்தம் புதிய திரைப்படங்கள், புதிய வெப் சீரிஸ்கள் ZEE5-ல் அணிவகுக்கவிருக்கின்றன!


