ரகுமான், பரத் இணைந்து நடித்துள்ள, சயின்ஸ் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘சமரா.‘சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு அந்த படத்தை போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிற ரகுமானுக்கு இந்த படமும் அதே வரிசையில் அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நடித்துள்ளார்.
இந்த படத்தை மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் ‘பீகாக் ஆர்ட் ஹவுஸ்’ பட நிறுவனம் சார்பில் எம் கே சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் சார்லஸ் ஜோசப்பிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தை சயின்ஸ் திரில்லர் சப்ஜெக்டில் ஃபேமிலி சென்டிமென்டும் கலந்திருக்கும்படி உருவாக்கியிருக்கிறோம். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்றார்.
படக்குழு:
கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்
ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
இசை – தீபக் வாரியர்
பின்னணி இசை – கோபி சுந்தர்
எடிட்டிங் – ஆர்.ஜே. பாப்பன்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
நடனம் – டேனி பவுல்