சினிமாவில் தடம்பதிக்கத் தயாரான ‘செங்கொடி’ குறும்படக்குழு!

பாக்கியராஜ் பரசுராமன் இயக்கிய ‘செங்கொடி’ குறும்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைக் குவித்தது.

அந்த உற்சாகத்தோடு ‘செங்கொடி’ படக்குழு வெள்ளித்திரையில் நுழைகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் உருவாகும் திரைப்படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here