முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து, ஒரு கட்சியின் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகவிருக்கிறது. ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது.

இந்த படத்தில் தோனி கபடிகுழு, வேட்டைநாய், படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்
ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்துள்ளார். காமெடியனாக ஏ.ஆர். தெனாலியும் நடித்திருக்கிறார்.
அப்புக்குட்டி, மற்றும் அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் ஆகிய இருவரும் படத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஜீவி 2 படத்தில் இன்ஸ்பெக்டராக கலக்கிய, நடிகர் நாசரின் தம்பி ஜவகர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களோடு விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ரா ய், குமர வடிவேலு,

மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.’தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு உளுந்தூர்பேட்டை,துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள்.விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு – மதன்குமார், எடிட்டிங் – யு கார்த்திகேயன், இசை -ரோஷன் ஜோசப், பின்னணி இசை – C. M. மகேந்திரா, பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண், வேல்முருகன்