புதுயுகம் தொலைக்காட்சியில், வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களைப் பற்றி நாய்கள் நமக்கு சவாலா? காவலா? என்ற தலைப்பில் சுவாரஸ்யமான விவாதம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி மனித நேயத்தை பற்றியும் விலங்குகளின் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நேயத்தை பற்றியும் விரிவாக விளக்குகிறது.
இதில் ‘ஷாட் பூட் த்ரீ’ பட இயக்குநர் அருணாச்சல வைத்தியநாதன், ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராகவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களோடு நாய் வளர்ப்பு பற்றி விவாதிப்பதற்காக செல்ல நாய்களை வளர்ப்போர் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்கள் குறித்து தங்களுடைய பார்வையை எடுத்துரைக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று காலை 11:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை அருள்மொழி தொகுத்து வழங்குகிறார்.
‘ஷாட் பூட் த்ரீ’ பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை குவித்துள்ளது.