சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘சீரன்’ படத்தின் முதல் பாடலை வெளியிடும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா நடிப்பில் சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்.’

‘நெட்கோ ஸ்டுடியோஸ்’ ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் எம்மின் அசோசியேட் இயக்குநர் துரை கே முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில், ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், சென்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏகே சசிதரண் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலை (First Single) செப்டம்பர் 28; 2023 அன்று மாலை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வளைதளத்தில் வெளியிடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here