பரபரப்பான காதல் கதையில் உருவாகும் ‘கொலைச்சேவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.இரஞ்சித்!

பரபரப்பு நிறைந்த காதல் கதையொன்று கலையரசன் கதாநாயகனாக நடிக்க ‘கொலைச்சேவல்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார்.

யூடியூப் குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற தீபா பாலு நாயகியாக இந்த படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார். பால சரவணனும், அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியையும் பெற்ற ‘லவ்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

படம் பற்றி பேசிய ஆர் பி பாலா, “இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்.

திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்த படம் கலையரசனுக்கு திருப்புமுனையாக அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – பி ஜி முத்தையா
இசை – சாந்தன்
படத்தொகுப்பு – அஜய் மனோஜ்
கலை இயக்கம் – சரவண அபிநாமன்
சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – நிகில்முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here