திரைக்கலைஞர் இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்.’
சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் வரும் நவம்பர் 24-ம் தேதி அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகிறது.
‘‘ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளதால், மக்களிடையே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” என்கிறார் படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு.