Home சினிமா விமல், யோகிபாபு நடிக்கும் கரம் மசாலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய...

விமல், யோகிபாபு நடிக்கும் கரம் மசாலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய விஜய் சேதுபதி!

விமல், யோகிபாபு நடிப்பில், மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக தயாராகும் ‘கரம் மசாலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படப்பிடிப்புக்கு பிறகான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

அதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாரணமாக வீடு , திருமணம், தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் படைப்பாக உருவாகிறது.

படத்தில் விமலுக்கு ஜோடியாக சாம்பிகா டயானா நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா,  மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது.

படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்