ஸ்கிரிப்ட் என்ன கேட்டதோ அதை செய்துள்ளோம்! – ‘கம்பி கட்ன கதை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதாநாயகன் நட்டி 

ராஜநாதன் பெரியசாமி இயக்கியுள்ள ‘கம்பி கட்ன கதை’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி, ”எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது. அதாவது காமெடியா வைச்சிருக்கோம். படத்தை மாஸாகவே செஞ்சிருக்கோம்” என்றார்.

கதாநாயகன் நட்டி ”படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் செய்தோம். படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது. கண்டிப்பா வந்து பாருங்க” என்றார்.

தயாரிப்பாளர் ரவி, ”’கம்பி கட்டுன கதை’ என்று தலைப்பு வைத்ததற்கு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை சிறப்பாக உருவாக்க பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. இந்த படத்திற்கு பாகம் 2 எடுக்கப்படும் வாய்ப்புள்ளது” என்றார்.

நடிகர் சிங்கம்புலி, நாயகன் முகேஷ் ரவி, நடிகர் முருகானந்தம், நடிகர் ‘ஜாவா’ சுந்தரேசன், படத்தின் கதாநாயகிகள் ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, படத்தை வெளியிடும் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் ஹரி உத்ரா, பாடலாசிரியர் கு. கார்த்திக், பாடலாசிரியர்  ஆ ப ராசா, கலை இயக்குநர் சிவகுமார், ஒளிப்பதிவாளர் எம் ஆர் எம் ஜெய் சுரேஷ், நடிகர் கே பி ஒய் கோதண்டம், நடிகர் வழக்கு எண் முத்துராமன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here