ஒரு செமையான குத்துப் பாட்டு. பாடியிருப்பவர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. ஆடவிருப்பவர் ‘சலீம்’ படத்தில் ஹிட்டடித்த ‘மஸ்காரா போட்டு மயக்குறியே’ பாடலில் சூடேற்றிய அஸ்மிதா. பாடல் இடம்பெறவிருக்கும் திரைப்படம் ‘வீரநகரம்.’ இசையமைத்திருப்பவர் முகேஷ் முனுசாமி.
இந்த பாடலில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், பாடலை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார் படத்தை தயாரித்து, இயக்கி முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிற வினோத்குமார்.
படத்தில் கதாநாயகிகளாக சாராமோனு & ரோஸ் நடிக்க, நான்கு வில்லன்களின் முக்கிய வில்லனாக மைக்கேல்ராஜ் மிரட்ட, சாய்தீனா சுவாரஸ்யமான காட்சியில் நடிக்கவுள்ளார்.
காமெடி ஏரியாவை லொள்ளு சபா மனோகர், திருப்பாச்சி பெஞ்சமின் இருவரும் கலக்கலாக கவனித்துக் கொள்ள, முக்கிய கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் டும்கான் மாரி நடித்துள்ளார். விஸ்வாசம் சிட்டுக்குருவி பாட்டி, ஈரோடு சேகர், விஜய் சங்கர், லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரும், திரைப்பட நடிகர்களும் அரசியல் தலைவர்கள் சிலரும் வெளியிட்டனர்.
விரைவில் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக படத்தின் டிரெய்லர மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குநர் வினோத்குமார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: விஜய் வெங்கட்
எடிட்டிங்: ரத்தினம் பாலாஜி
பாடல்கள்: திருண்சூர்யா
ஒப்பனை: நந்தினி
நடனம்: நவீன்குமார் ஹரி
பி ஆர் ஓ: மணிகண்டன்