கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் ‘பொன்னி C/O ராணி.’
மறுபுறம் பூஜா தனது சூழ்ச்சிகளை தொடர, ராணிக்கும், பொன்னிக்கும் பூஜா மீது சந்தேகம் வருகிறது. இதற்கிடையே பொன்னியிடம் ஏதோ மர்மம் இருப்பதாக அதை கண்டுபிடிக்க பூஜா முயற்சி செய்ய, பூஜா மீது பொன்னிக்கு சந்தேகம் வருகிறது.பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் ஜெயிலுக்கு சென்று திரும்பிய ராஜாராம் மன உளைச்சலில் இருப்பதால், பொன்னி அலுவலக பொறுப்புக்கு வருகிறார். இதற்கிடையே பூஜாவின் சூழ்ச்சியால், பொன்னி மில்ஸில் முக்கியமான அரசு ஆர்டரை சரியான நேரத்தில் முடிப்பதில் பூஜாவால் குழப்பம் ஏற்பட, பொன்னி மீது ராஜாராம் கோப்படுகிறார். பொன்னி சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க போராட, பூஜா அதற்கு எதிரான சதிகளை தொடர என தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.