‘கொத்தங்கோடு பங்களா’ படத்துக்காக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தொடர்ந்து பாடுகிற கனடா பாடகி வரவைக்கப்பட்டு பாடல் பதிவு!

கே.ஜே.எஸ். மீடியா புரொடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிக்கும் திகில் திரைப்படம் ‘கொத்தங்கோடு பங்களா.’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார்.

இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், கொல்கத்தாவில் பிரபலமான மாடல் ஒருவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையொருவர் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் விவேகா எழுதுகிறார்.

அவற்றில் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடைபெற்றது. பாடலைப் பாட பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார். இவர் 2019-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இவர் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ‘மாதரே…’ எனும் பாடலை சின்மயியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். அதன்பிறகு கொத்தங்கோடு பங்களா படத்தில் பாடுவதற்காக வரவழைக்கப்பட்டுள்ளார்.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் விது பாலாஜியிடம் கேட்டபோது படத்தில் இடம்பெறுவது வித்தியாசமான காதல் பாடல். அதற்கு வசீகரமான ஒரு குரல் தேவைப்பட்ட காரணத்தால் நானும் இயக்குனரும் இவரை கனடாவில் இருந்து வரவழைத்தோம்.

இந்தியாவிலேயே 50க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரே மகத்தான இசைக்கலைஞரின் உழைப்பும் இந்த படத்தில் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலாச ஜே.செல்வம் அவர்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் 15 ஆண்டுகளாக ஒலிப்பதிவாளராக இருந்தவர். அதனால் யுவனின் ஆசி பெற்று இத்திரைப்படத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here