அமிதாப்பச்சன் இந்த படத்தை பாராட்டினார்! -‘கப்ஜா’ படவிழாவில் இணை தயாரிப்பாளர் பெருமிதம்

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் ‘கப்ஜா.’

உலகம் முழுவதும் மார்ச் 17-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.நிகழ்வில் இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன், “படத்தின் தரம் தெரிந்துதான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்திருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கலாக இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரம், கதை, திரைக்கதை என அனைத்தும் படத்தை மெருகேற்றியுள்ளது. படம் பார்த்த பின்னர் நான் கூறியது சரியென நீங்களும் கூறுவீர்கள்” என்றார்.

இயக்குநர் சந்துரு, “உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. படம் பார்த்துவிட்டு கருத்தைக் கூறுங்கள்” என்றார்.நடிகை ஸ்ரேயா சரண், “கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. படத்திற்கு உங்களுடைய ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் உபேந்திரா, “இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கிறார்கள். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழகமெங்கும்  வெளியிடுகிறது.

படக் குழு:
தயாரிப்பு நிறுவனம் – Sri Siddeshwara Enterprises & Invenio Origin
இயக்கம், தயாரிப்பு – ஆர்.சந்துரு
இணை தயாரிப்பு – அலங்கார் பாண்டியன்
ஒளிப்பதிவு  – A. J. ஷெட்டி
எடிட்டிங் – தீபு S. குமார்
இசை – ரவி பஸ்ரூர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here