யோகிபாபு, மன்சூரலிகான், செந்தில், மனோபாலா, மனோகர், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் என பலர் நடித்துள்ள படம் ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்.’
இந்த படத்தின் தலைப்பு ‘கிச்சி கிச்சி’ என மாற்றப்பட்டு ஜூலை 8-ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவிருக்கிறது.
படம் பற்றி இயக்குநர் பா. ஆனந்தராஜனிடம் கேட்டோம்… ” ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’னு வெச்சிருந்த தலைப்பு ரொம்ப பிரபலம் ஆயிருச்சி. அதேநேரம், படம் பத்தி வேற ஒரு பார்வையும் மக்கள் மத்தியில பரவுச்சு. அதனால தலைப்பை மாத்திருக்கோம்.
இயக்குநர் சுந்தர். சியின் பட பாணியில இது முழுக்க முழுக்க காமெடி படம். தூய்மையான காதலை மையப்படுத்தி கதை நகரும்.
சின்னது, பெரியதுனு இல்லாம நல்ல சினிமாவை மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை 100% எங்களுக்கு இருக்கு. இது எனக்கு மட்டுமில்லாம என்னுடன் சேர்ந்து உழைத்த நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கும் வாழ்க்கை. அதை மனதில் வைத்து கடுமையாக உழைத்து படத்தை நல்ல முறையில் கொண்டு வந்துள்ளோம். மக்கள் படத்தை திரையில் பார்த்து ரசித்து வெற்றிபெற வைப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
இயக்குநர் பா. ஆனந்தராஜன் சமுத்திரக்கனி மற்றும் கம்பீரம்’, அரசு’ படங்களில் இயக்குநர் சுரேஷிடம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவரின் முதல் படம் ரீங்காரம்’ இசையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அந்த படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.