அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்த, தஞ்சையின் புதிய அடையாளமான பிரமாண்ட ‘லாங்வால்’ மால்!

தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா நேற்றைய தினம் (10.04.2024) நடத்தப்பட்டது.

இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய, “டி.ஆர்.பி. ராஜா பேசுகையில் தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

விவசாய பெருங்குடி மக்கள் உள்ள இந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இந்த மால் மிகப்பிரம்மாண்டமாக 200000 சதுர அடியில் உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனங்களும் உலகின் தலை சிறந்த நிறுவனங்களும் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளன. மேலும் இங்கு 800 இருக்கைகள் கொண்ட மூன்று திரையறுங்குகளும் அமைந்துள்ளது. சிறப்பான விசயமாக உள்ளது.

இப்பெரும் நிறுவனம் உருவாக காரணமான வி.என்.டி இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மாநகராட்சி மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆஷிஸ் ராவத் IPS சென்னை சில்க்ஸ் நந்தகோபால் அரவிந்த் Eye Hospital அரவிந்த் Hereditary trustee ஸ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய லாங்வல் மால் சேர்மன் திரு. சுஜய் கிருஷ்ணா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here