சந்தோஷ் பிரபாகர் கதைநாயகனாக நடித்துள்ள ‘லூ’ படத்தின் குழுவினரை பிரபல இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் நேரில் அழைத்து பாராட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு ஆவணப் படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்திற்கான கதை எழுதி, இயக்கியிருக்கிறார். பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்த படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
படத்தில் சந்தோஷ் பிரபாகருடன் கிலைட்டன், அலெக்ஸ்பாண்டியன், வைணவஸ்ரீ, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹரா, கிறிஸ்டினா கதிர்வேலன் உட்பட பல படங்களில் பணிபுரிந்த பிரகத் முனியசாமி தன் கேமரா மூலமாக மிக யதார்த்தமாக கொடைக்கானல் மலை அழகையும், அந்த மக்களின் வலியையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் பங்கேற்கவுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.


