Home சினிமா ‘மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1′ ஒரு பார்வை

‘மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1′ ஒரு பார்வை

‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.

அது இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான சாவி. அதன் ஒரு பகுதி மிலிட்டரி தரப்புக்கு கிடைக்க, அடுத்த பகுதியை மீட்டு வரவேண்டிய பொறுப்பு படத்தின் ஹீரோவுக்கு தரப்படுகிறது. அந்த பணியை அவர் முடிப்பதற்குள் சந்திக்கிற கஷ்ட, நஷ்டங்களே படத்தின் விறுவிறுப்பான கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6, 2020 அன்று தொடங்கியது. படப்பிடிப்பில், கடற்பரப்பை விட 1200 நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா CRF 250 பைக்கை ஓட்டுவதைக் காண முடிந்தது.

பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாராசூட்டைத் திறந்து தரையிறங்கினார். இதற்காகப் படத்தின் முன் தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ்(skydive)களையும், 13000 Motocross jumpsகளையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி நடித்தார்.

இப்படியான அர்ப்பணிப்பால், மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எகிறுகிறது.

சாகசக் காட்சிகளில் வழக்கம்போலவே சிலிர்க்கச் செய்கிறார் டாம்குரூஸ். மோட்டர் பைக் ஜம்பிங் காட்சி கூடுதல் சிலிர்ப்பைத் தருகிறது. ரயில் விபத்துக் காட்சிகளின் பிரமாண்டமும் ஆச்சரியப்படுத்துகிறது.

MI6 அதிகாரியாக நடித்திருக்கும்ரெபேக்கா பெர்குசன், வில்லனாக நடித்துள்ள Esai Morales உள்ளிட்டோரின் பங்களிப்பும் அசத்துகிறது.

டாம் குரூஸுடன் இணைந்து ஒரு டஜன் படங்கள் உருவாக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்வாரி இந்த படத்தின் உருவாக்கத்தின் மூலமும் தன்னை கவனிக்க வைத்துள்ளார்.

படக்குழு:-
நடிகர்கள்: Hayley Atwell, Ving Rhames, Simon Pegg Vanessa Kirby, Henry Czerny
ஒளிப்பதிவு – Fraser Taggart
இசை – Lorne Balfe
படத்தொகுப்பு – Eddie Hamilton

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்