‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் புதிய படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960.’
இந்த படத்தில் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ் லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். டியூட் விக்கி எழுதி, இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
கதை & இயக்கம் – டியூட் விக்கி
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் ISC
படத்தொகுப்பு – ஜி.மதன்
கலை – மிலன்
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன்
ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார்
விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டிகேடி
தயாரிப்பு மேற்பார்வையாளர் – A P பால் பாண்டி.
தயாரிப்பு நிர்வாகி – ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பாளர் – A.வெங்கடேஷ்
தயாரிப்பாளர் – S. லக்ஷ்மன் குமார்
தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்