பெண்கள் அருள் வந்து ஆடிய ‘சரக்கு’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! தாரை தப்பட்டை கலை நிகழ்ச்சிகளோடு கரைபுரண்ட உற்சாகம்.

மன்சூர் அலிகான் கதையெழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘சரக்கு.’ இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்க வளாகத்தில் நடந்தது.

விழா நிகழ்விடத்தில் பிரமாண்டமான அம்மன் சிலை அமைக்கப்பட்டு கண்கவரும்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாது தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், அக்கினி சட்டி என கலைநிகழ்ச்சிகள் அணிவகுக்க திருவிழா நடப்பது போன்ற உணர்வோடு பாடல்கள் வெளியீட்டு களைகட்டியது.

படத்தில் இடம்பெறும் அம்மன் பாடலொன்று திரையிடப்பட பக்திப் பரவசத்தில் அரங்கில் சிலர் அருள்வந்து சாமியாடியது விழாவை கூடுதல் சுறுசுறுப்பாக்கியது.

விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ், அரசியல் பிரபலம் பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், வசனகர்த்தா லியாகத் அலிகான், நடிகர் ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணி, சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். மதுவின் கேடுகளை எடுத்துச் சொல்லி, அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றிருந்ததை கண்டு சமூக விழிப்புணர்வுப் படத்தை தயாரித்து நடித்திருப்பதற்காக மன்சூர் அலிகானை பாராட்டி பேசினார்கள்!

வழக்கம்போல் இசைத் தட்டு வெளியிடாமல், பாடல்கள் மற்றும் டிரெய்லர் திரையிடப்பட்டு, விருந்தினர்களின் வாழ்த்துரை, சிறப்புரையோடு விழா நிறைவடைந்தது.

பாடல்களும் டிரெய்லரும் பரபரப்பை உருவாக்கி வரும்நிலையில், படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் மன்சூர் அலிகான்.

படம் பற்றி…
‘சரக்கு’ படத்தை ‘ராஜ் கென்னடி பிலிம்ஸ்’ சார்பில் மன்சூர் அலிகான் மிகப்பெரிய பொருட்செலவில், பிரமாண்டமாக தயாரித்துள்ளார். படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – அருள் வின்செண்ட், மகேஷ்.டி
இசை – சித்தார்த் விபின்
திரைக்கதை, வசனம் – எழிச்சூர் அரவிந்தன்
படத்தொகுப்பு – எஸ்.தேவராஜ்
சண்டைக் காட்சிகள் – கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

‘சரக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்:-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here