அநீதிகளை தட்டிக் கேட்கும் கதாநாயகி; தாய்க்காக ஏங்கும் குழந்தை… திருப்பங்களோடும் சுவாரஸ்யங்களோடும் வேகமெடுக்கும் சன் டி.வி.யின் ‘மல்லி’ மெகா தொடர்!

மல்லி. இது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகா தொடர்.

விஜய், நிகிதா, பேபி ராகிலா, மாஸ்டர் நிதீஷ், பூர்ணிமா பாக்யராஜ், மதன் பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த தொடரை மணிபாரதி இயக்க, மாரிமுத்து திரைக்கதை எழுதியிருக்கிறார். வசனங்களை மருது சங்கர் எழுத, அகிலன் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசையமைக்கிறார்.

ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறார் என்பதே இந்த தொடரின் கதை.

மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணிபுரிகிறார். அந்த பள்ளியில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்டு அதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி, சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா, அவள் தந்தை விஜயிடம் தனக்கு அம்மா வேண்டும் என கேட்டு போராடுகிறாள்.

இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய், குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறான்? மல்லி அந்த குழந்தைக்கு எப்படி தாயாக வந்து சேர்கிறாள்? என்பதை விறுவிறுப்பான சம்பவங்களோடு, திருப்பங்களோடு தொடர் சுவாரஸ்யமாக நகர்கிறது.

இந்த தொடரை சரிகம நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில், பி ஆர் விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here