யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் ‘Mr. பாரத்’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் ‘Mr. பாரத்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இணைய உலகத்தில் செம்ம ஹைபை உருவாக்கிய பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகியோர் தங்களின் முதல் முழுநீள திரைப்படமான Mr. பாரத் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளனர். லோகேஷ் கனகராஜ் அவர்களும் பாரத், நிரஞ்சனும் இணைந்த சமீபத்திய க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், தற்போது படக்குழு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . “Mr. பாரத்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது!

படப்பிடிப்பு குறித்து Passion ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியபோது, “இளம் குழு என்பதாலேயே இவர்களது தெளிவு, திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. கதை அம்சமே எங்களை ஈர்த்தது, ஆனால் திட்டமிட்டபடி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகச் செயலில் இருந்தனர். ஒரு தயாரிப்பாளராக, இவ்வாறு திறமையான இளைய குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

லோகேஷ் கனகராஜ் வழங்க passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட் மற்றும் தி ரூட் நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜகதீஷ் பழனிசாமி ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம் தற்போது பிந்தைய தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளது. இதற்கான அடுத்தஅடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

பிரதான கதாப்பாத்திரங்களில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பாலா சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்க, இளைஞர்களை ஈர்க்கும் ஒரு உற்சாகமான நட்சத்திரக் குழுவாக உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here