அண்ணன் சூர்யா தயாரிக்கும் ‘மெய்யழகன்’ படத்தில் நடிக்கும் கார்த்தி! ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி குவியும் வரவேற்பு.

கார்த்தி நடிக்கும் 27-வது படம் ‘மெய்யழகன்.’ இந்த படத்தில் மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க, ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் என பலரும் நடிக்கிறார்கள். சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை 96 என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரேம்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 96 படத்தில் மெகா ஹிட் பாடல்களை தந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீண்டும் பிரேம்குமாருடன் இணைகிறார். படப்பிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் நடந்து முடிந்தது

படம் பற்றி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசியபோது, “கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இருக்கும்” என்றார்.

படக்குழு:-

தயாரிப்பு: ஜோதிகா & சூர்யா
இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு,
எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ்,
புரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன்,
பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி,
மேக்கப்: வி.முருகன்,
மக்கள் தொடர்பு: ஜான்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here