Home சினிமா புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்காக மை டியர் டாலி பட வருமானத்தின் ஒரு பகுதியை வழங்க முன்வந்த...

புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்காக மை டியர் டாலி பட வருமானத்தின் ஒரு பகுதியை வழங்க முன்வந்த தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா! 

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள மை டியர் டாலி’ திரைப்படத்தை அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கியுள்ளார். கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்த படம் உலகளவில் இன்று வெளியானது. படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தை தயாரித்துள்ள சிம்ம மூர்த்தி சினிமாஸ் சிவராமகிருஷ்ணா டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்