‘கெட்டவன்கூட சேர்ந்தால் நல்லவனும் நாசமாவான்’ என்ற கருத்தை கரடு முரடான திரைமொழியில் சொல்கிறது ‘மஞ்சக்குருவி.’
‘கும்பகோணம்’ குணா (கிஷோர்) காசுக்காக எதையும் செய்கிற ஆசாமி. அவரால் அவரது தங்கையின் மனதைக் கவர்ந்தவன் பலியாகிறான். சில வருடங்கள் கடந்தோட, அந்த தங்கையின் இதயத்தில் இடம்பிடிக்கிற இன்னொரு இளைஞன் கிஷோரை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறான். அதன் விளைவு என்ன என்பதே கதை… இயக்கம்:- அரங்கன் சின்னத்தம்பி
ஊரையே தன் ரவுடித்தனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்POWERராக கிஷோர். மிரட்டல் பேச்சு, தெனாவட்டு நடை என ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கம்யூனிஸம் பேசிக் கொண்டு, காரல் மார்க்ஸை படித்துக் கொண்டு பொதுவுடமைப் பாதையில் நடைபோடுகிற தோழராக கதைநாயகன் விஷ்வா. லட்சணமாக இருக்கிறார்; கதைக்குத் தேவையானதை முடிந்தவரை சரியாகச் செய்திருக்கிறார்.
நாயகி நீரஜாவின் கண்கள் காதல்வயப்படும்போது கவிதை பேசுவது அழகு. பரிதாபத்தை வெளிப்படுத்தும் அந்த மென்சோகமும் ஈர்க்கிறது.
வெட்டுக் குத்து, கொலை என டெரராக திரியும் கிஷோரை போட்டுத்தள்ள துடிக்கும் ராஜநாயகம் காட்டும் ஆக்ரோஷத்தில் வீரியம் குறைவு!
டிராஜடியான கதையோட்டத்தில் ஆறுதல் தருகிறது கஞ்சா கருப்பு – ‘சாரப்பாம்பு’ சுப்புராஜின் காமெடி டிராக்!
இசை, பாடல், ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்.
திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்!

