ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி நடிப்பில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘விட்னஸ்.’ டிசம்பர் 9 சோனி ஓடிடி’யில் ரிலீஸ்!

வரும் டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம்.

இந்த படத்தை தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் தீபக். அறிமுக இயக்குநரான அவரே இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும்கூட!

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்ப்பதே கதைக்களம்!ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான இந்த ‘விட்னஸ்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைகிறது.

இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here