நாட்டில் குற்றங்கள் குறைய ‘மாவீரன் பிள்ளை’ போன்ற மதுவுக்கு எதிரான படங்கள் அதிகளவில் வர வேண்டும்! -பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு

மதுவால் ஏற்படும் அவலம் குறித்தும், மதுவை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் விவரிக்கிற விழிப்புணர்வுப் படமாக கடந்த வெள்ளியன்று வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது ‘மாவீரன் பிள்ளை.’

கே.என்.ஆர். ராஜா தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சந்தன வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஐயா அவர்கள் இந்த படம் பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்தார்.

பார்த்து முடித்ததும் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த அவர், “மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியானால், குற்றங்கள் குறையும். தமிழகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்று பாராட்டினார்.அவரது பாராட்டால் மாவீரன் பிள்ளை படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here