புதுமுகங்கள் பங்களிப்பில் தாரத்தின் பெருமையை, தாய்மையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் ‘மனைவியின் மறுபக்கம்.’

இயக்குநர் உடுமலை பி.டி.ஜிஜு இயக்கும் படம் ‘மனைவியின் மறுபக்கம்.’

கதையின் நாயகனாக டிங்கு ராஜ், நாயகியாக திவ்யபாரதி நடிக்க; ஷெரீப், கோபி, குமார், முகேஷ், டாக்டர். ஆலம் எஸ்.சிவம் மற்றும் லட்சுமி செந்தில்வேல் ஆகியோர் இன்னபிற முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

புதுமுகங்கள் பலரது நடிப்பில் உருவாகும் இந்த படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்… ”மனைவியின் மகத்துவத்தை போற்றும் விதமாக உருவாகியுள்ள படம் இது. கெட்ட சகவாசம் உள்ள ஒருவனை ஒரு பெண் காதலித்து அவனுடன் மணவாழ்க்கையில் இணைகிறாள். தன் வாழ்க்கையில் ஒரு பெண் வந்தும்கூட அவன் திருந்தவில்லை. கொஞ்ச நாட்களில் அந்த பெண் தாய்மைடைகிறாள். நாட்கள் நகர்கிறது. ஒருநாள் அவள் பிரசவ வலியில் துடிக்கிறாள். தன் கண்முன்னே மோசமான நிலைக்கு ஆளான மனைவியைக் கண்டு அவனும் துடிக்கிறான். மனம் திருந்துகிறான். இதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.

புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த படமும் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும்” என்றார்.

இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தாரத்தில் தாய்மையை உணர்ந்த நேரம் கைமீறி போனதே எல்லாம் நான் செய்த பாவம்… எனும் பாடல் தாரத்தையும் தாய்மையின் பெருமையையும் கூறும் பாடலாக இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூர்,குமுளி, உடுமலைபேட்டை , வண்டலூர் போன்ற இடங்களில் 35 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

படக்குழு:-

தயாரிப்பு – ஏ.சி.எஸ்.ஆர்.எஃப், கி.பா. அசோக்
ஏ.ஆர்.சுஷன் கார்த்திக்

கதை திரைக்கதை வசனம் பாடல்கள்
இயக்கம் – உடுமலை பி.டி.ஜிஜு

ஒளிப்பதிவு – அன்னை செல்வா பாலமுருகன்

இசை – ரீகன்
எடிட்டிங்- ஆனந்தகிருஷ்ணன்
நடனம். யோயோ.ராஜேஷ்
ஸ்டண்ட்- ‘இடிமின்னல்’ இளங்கோ
இணை இயக்கம் – ஜான்சுந்தர்

மக்கள் தொடர்பு – வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here