விக்ரம் பிரபு நடிக்கும் இரத்தமும் சதையும்.’ வெளியானது அசத்தலான டைட்டில் லுக்!

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இரத்தமும் சதையும் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி கதாபாத்திரமாக தன்னை மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு.
இந்நிலையில் அடுத்ததாக ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here